Tuesday, 6 December 2011

தொழிலாளர் பாடல்


பள்ளியிலே பாடங்களைக்     கற்றுத் தந்திடுவார்
நல்ல நல்ல பண்புகளை சொல்லித் தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் ஆசிரியர் என்றே சொல்லு

பருத்தியை நூலாக்கி  நமக்கு தந்திடுவார்
பட்டுச்சேலை போர்வைஎல்லாம் நெய்தே தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் நெசவாளர் என்றே சொல்லு


துணிகளை சட்டையாக்கி நமக்கு தந்திடுவார்
பாவாடை சட்டையெல்லாம் தைச்சே தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் தையற்காரர் என்றே சொல்லு


வீடு வீடாய்க    கடிதத்தைக்  கொண்டு  சேர்த்திடுவார்
வெயிலிலும்   மழையிலும்  வேலையைச்செய்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் தபால்காரர்     என்றே சொல்லு

சிமேண்ட் மணல் செங்கல் கொண்டு வீடு கட்டுவர்
ஓட்டுவீடு மாடிவீடு எல்லாம் கட்டுவர்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் கொத்தனர் என்றே சொல்லு

மரங்களை செதுக்கியே பொருள்கள் செய்திடுவார்
நாற்காலி மேசை எல்லாம் செஞ்சு தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் தச்சர் தானே என்றே சொல்லு

களிமண்ணால் பொம்மைகளைச் செஞ்சு தந்திடுவார்
பபூத்தொட்டி பானைச்சட்டி எல்லாம் செஞ்சிடுவர்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் குயவர்தான் என்றே சொல்லு

No comments:

Post a Comment