Wednesday, 18 April 2012

புதுக்கோட்டை -முக்கிய இடங்கள்

அறந்தாங்கி

புதுக்கோட்டையை அடுத்த பெரிய நகரம். முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் சேர்ந்தது. இங்குள்ள சிதைந்த கோட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு

வரலாறு

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும்

வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை

(புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.